Sunday, May 15, 2011

மனக்கசப்பு

காதலர்களுக்கிடையே மனக்கசப்பு,
தின மலர் நாளிதழைப் போல
சண்டேனா ரெண்டு....
கவிதை எழுத துடிக்கிறேன்,
இயலவில்லை..
என்னுள் கவிதையாய் நீ!!!

என்னவென்று சொல்ல...

எதைச் சொல்ல,
எனக்கு கண் வலி என்று தெரிந்ததும் எனக்கு மருந்து போட்டு
என் கண்மணி என்னை கருத்தாய் கவனித்து கொண்டாலே!!
அதைச் சொல்லவா..

ஆனால் இப்போது...
இதை எதையுமே சொல்ல இயலாமல் நான் மட்டும் தனிமையில் இருப்பதை என்னவென்று சொல்ல....
அவளுக்கு நான் தாலி கட்டும் நேரத்தில் !!!
" ராஜன் " என " எழுப்பியது "
என் அம்மாவின் குரல்...

Thursday, April 21, 2011

உன்னை எண்ணி!!

எனது இதயத்தின் திரையை கிழிக்க முனையாதே பெண்ணே
அது ஏற்கனவே மரத்து போய் விட்டது!!
உன்னை எண்ணி!!

Monday, March 28, 2011

பிரிவின் வலி..

நடந்து சென்றேன்,
உன்னோடு நடந்து சென்ற பாதையில்..
உன் பிரிவின் வலி இன்று புரிகின்றது,
எனதன்பிற்குரிய தோழியே !!!

Monday, March 14, 2011

மழை..

என்னவளின் வேலை பளுவை குறைக்க
இந்திரன் கூட உதவி செய்கிறான்..
அதிகாலையில் மழையாய் !!

Thursday, March 10, 2011

சென்னை எழும்பூர். . .

சூரியன் தன் வெப்பத்தை தணிக்கும் நேரம்.. எனது சொந்த ஊர் செல்வதற்க்காக ரயில்வே ஸ்டேஷன்க்கு சென்று வரிசையில் காத்திருந்தேன். அப்போது நிறைய கூட்டம் அதனால் காத்திருக்க வேண்டியதாயிற்று, ஆனால் அன்று எனக்கு ஊருக்கு போக வேண்டும் என்ற எண்ணம் இல்லை. கூட்டத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.. ஆகா! தமிழர்கள் படும் பாடு இருக்கே... அவர்கள் செய்வதல்லாம் எனக்கு நகைச்சுவையாக தெரிந்தது. அப்போது ஒரு 42 வயது மிக்கவர் வந்து என்னிடம், ' அண்ணே ' எனக்கு ஒரு டிக்கெட் எடுத்துக் குடுப்பா என்று கேட்டார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை திட்ட ஆரம்பித்தார்கள். அவரோ, ' அண்னே '.. ' அண்ணே ' கோச்சுகாதிங்க, எனக்கு போக வேண்டிய ரயில் இன்னும் 5 நிமிடத்தில் கிளம்பிடும் அதனால் மன்னித்து விடுங்கள் என்று கெஞ்சி கேட்டார். எனக்கு பரிதாபமாக இருந்தது. திடிரென, என்னிடம் அண்ணே உங்களுக்கு 10 ரூபாய் தரேன்.. நீங்க எனக்கு டிக்கெட் எடுத்து கொடுங்க என்றார். நான் சிரித்துக் கொண்டே நான் உங்களுக்கு அண்ணன் இல்ல தம்பின்னு சொல்லுங்க போதும், நான் உங்களுக்கு எடுத்து தரேன் கவலைபடாம நில்லுங்க என்றேன். அவர் சற்று ஆசுவாச படுத்தி கொண்டு ரொம்ப நன்றி தம்பி என்று சொல்லி விட்டு எனக்கு சொன்ன படி பத்து ரூபாய் கொடுத்தார். அச்சோ!! இதுக்கு எதுக்குன்னே காசு தர்ரிங்க வேண்டாம் என்று சொல்லி முடிப்பதற்குள், எனக்கு டாட்டா காண்பிச்சார் ரயிலில் இருந்து... நான் என்ன பண்றதுன்னு தெரியல.. மனசுக்குள்ள ' மச்சி இன்னிக்கி அதிர்ஷ்டம் நம்ம பக்கம் டா ' என்று சொல்லுச்சு. ஆனாலும் கொஞ்சம் வருத்தம் இருந்தது. அதற்கப்பறம் நானும் ரயிலேறி எனது சொந்த ஊர் சென்று திரும்பினேன்.
சில நாள் கழித்து என் பையில் பணம் இல்லை. என்ன பண்ணுவதென்று தெரியாமல் ரயில்வே
ஸ்டேஷன் அருகில் நின்று கொண்டிருந்தேன். தீடிரென போலீஸ் வந்து வரிசையாக நில்லுங்க.. தள்ளி நிக்ரவங்க எல்லாம் பிளாட்பாரம் டிக்கெட் கான்ம்பிங்க என்று கேக்க ஆரம்பிச்சாங்க. நான் பயந்து போய் வரிசையில் நின்று விட்டேன். வரிசை வேற பெரியதாக இருந்ததால் எனக்கும் வசதியாய் போய்விட்டது. எப்பவும் போல போலீஸ்காரர்கள் சென்று விட்டனர்.
தீடிரென அன்று நடந்தது போல், ஒருவர் ஓடி வந்து, அண்ணே எனக்கு ஒரு டிக்கெட் எடுத்து கொடுங்கன்னு கெஞ்சினார். என் பையில் ஏதும் பணம் வேற இல்லை அதனால் எனக்கு பழைய நியாபகம் வந்தது. மனசுக்குள்ள ' மச்சி இன்னிக்கும் கடவுள் கை குடுக்குறாரு டா ம்...ம்.. கலக்குற போ ' என்று நினைத்து கொண்டு, அய்யா!! அக்கம் பக்கத்துல இருக்கறவங்க திட்டுவாங்கலேன்னு சொன்னதும், பக்கத்துல இருக்கறவர் கத்த ஆரம்பிச்சுட்டாரு ' யோவ் உனக்கு வரிசைல வர முடியலையா ', உடனே அவர் ஒரு யோசனை குடுத்தார். தம்பி நானும் போய் வரிசைல வர்ரேன், ஆனால் நீ பக்கத்துல இருக்க அதனால நீ டிக்கெட் எடுத்துடு, நான் வேணா உனக்கு ஒரு பாத்து ரூபாய் தர்ரேன் தம்பி தயவுசெய்து வேண்டாம்னு சொல்லிடாத அண்ணனுக்கு இன்னும் 10 நிமிசத்துல ரயில் கிளம்பிடும். விட்டுட்டா நாளைக்கு தாண்டா தம்பி போக முடியும்.. அண்ணனுக்காக செத்த எடுது
க்குடுடா ....... சரிண்ணே நீ போய் நில்லு நான் எடுத்து தர்ரேன்னு சொல்லி ரகசியமா 150 ரூபாய் குடுத்தார். ஒரு மதுரை டிக்கெட் எடுத்தேன். ' இன்னும் 2 நிமிடத்தில் எட்டாவது நடைமேடையில் இருந்து மதுரைக்கு செல்லும் கடைசி தொடர் வண்டி கிளம்ப இருக்கிறது ' என்ற தகவலை கேட்டதும் அண்ணே உங்க டிக்கெட் இந்தாங்க.. வேகமா போங்க கிளம்ப போகுதுன்னு சொல்லி மீதமுள்ள காசை எடுத்து நீட்டியதும், தம்பி ரொம்ப நன்றிப்பா!! என்று சொல்லிக் கொண்டே எனது பாக்கெட்டில் 10 ரூபாய் எடுத்து வைத்து விட்டார்.
" மதுரைக்காரர்ல வாக்கு தவறாம கொடுத்துட்டாரு.. "
இருந்தாலும், அண்ணே வேண்டாம்ணே வச்சு
க்கங்கன்னு சொல்லி முடிக்கறதுகுள்ள, பரவாயில்லடா தம்பி வச்சுக்கடான்னு சொல்லிட்டு போய்ட்டாரு.... எனக்குள்ள ஒரே சந்தோஷம்.. ஆகா கடவுளே ரொம்ப நன்றிப்பா என்று எனது நன்றியை தெரிவித்துவிட்டு வேகமா ஹோட்டல்க்கு போய் 3 இட்லி வாங்கி சாப்பிட்டு அன்று எனது இரவு உணவை முடித்து விட்டேன்...
சரி..ங்..க.... ரயிலுக்கு நேரமாச்சு இன்றைக்கு ' கோழி கறி ' சா
ப்பிடலாம்ன்னு முடிவு பண்ணிருக்கேன்.

நிழல்..

என்னவளின் நினைவுகளை இன்றும் தொடர்கிறேன் கனவில்,
என்னவளின் நிழலைப் போல..

Monday, February 28, 2011

தீபாவளி..

தினமும் என் கனவில்,
அவள் சிரிக்கும் ஒவ்வொரு நிமிடமும்...

Sunday, February 27, 2011

என்னவளின் நினைவுகள்...

என் வீட்டில் தனியாக இருக்கும் போது
என்னவளை நினைத்து
நான் பேசிய பேச்சுக்களை கேட்ட
என் வீட்டு வெப் கேம் கூட அவளை படம் பிடிக்க அடம் பிடிக்கின்றது...